அபிமன்யு
அபிமன்யு
அபிமன்யு பாரதத்தின் உத்தம வீரன்....
அபிமன்யு அர்ஜுனன்- சுபத்ரையின் மகனாவான்.
பிறக்கும் முன்பே போர் வித்தைகளை கற்றவன்.
தாயின் கருவில் வாசம் செய்யும் போதே சக்ரவியூகத்தை உடைக்க கற்றவன்.தந்தையை போலவே வில்வித்தையில் கை தேர்ந்து விளங்கினான்.
பிறக்கும் முன்பே போர் வித்தைகளை கற்றவன்.
தாயின் கருவில் வாசம் செய்யும் போதே சக்ரவியூகத்தை உடைக்க கற்றவன்.தந்தையை போலவே வில்வித்தையில் கை தேர்ந்து விளங்கினான்.
வாசுதேவர் இவனுக்கு மாமனாவார்.அர்ஜுனனின் வேண்டுதலுக்கு இணங்கி அபிமன்யுவிற்கு போர் உக்திகளை போதித்தார்.
பாண்டவர்கள் யுதீஷ்ட்ரனுக்கு பிறகு இவனையே மன்னனாக்க முடிவு செய்தனர்.
சீரிய ஞானத்தினாலும்,இறைவனின் வளர்ப்பு என்பதினாலும் இவனிடம் கர்வம் என்பது இருந்ததில்லை.விராட நாட்டின் இளவரசி உத்திரையை துணைவியாக ஏற்றான்.அபிமன்யு சக்ரவியூகத்தைவிட்டு வெளியேறும் உக்தியை அறிவதற்குள் மஹாபாரத போர் மூண்டது.ஒருகட்டத்தில்...சக்ரவியூகத்தை உடைக்கும் வழி அறியாது பாண்டவர் திணறினர்.அச்சமயம் அர்ஜூனனும் அங்கில்லை.
அபிமன்யுவே சக்ரவியூகத்தை உடைக்கும் சபதம் பூண்டு கவுரவர்கள் வலையில் சிக்கினான்.தாய் திரௌபதியின் மானக்கேட்டிற்கு பழிவாங்க வீறுக்கொண்டு எழுந்தான், துரியோதனால் சித்ரவதை செய்யப்பட்டு மாவீரா்களால் வதைக்கப்பட்டான்.
இவ்வுலகில் மிகச்சிறந்த வீரன் உன்னை போல இன்னொருவன் எந்த யுகத்திலும் பிறக்கபோவதில்லை என்று மிருத்யுன்ஜயனால் தலைவணங்கப்பட்டான்.
தனது மனைவி கருவுற்றிருக்கும் இனிய செய்தியையும் அறியாமல் உயிர் துறந்தான் இவ்வீரன்.
அபிமன்யு உத்தமத்தின் உச்சக்கட்டம் மட்டுமின்றி அழிக்கமுடியாத சகாப்தம்!!!
Leave a Comment