கிருஷ்ணனின் கீதை உபதேசம்
கிருஷ்ணனின் கீதை உபதேசம்
வாழ்வில் நிகழும் நிகழ்வனைத்திற்க்கும் தொடர்பு...'வேண்டுதலாகும்'.
பதி எப்படி இருப்பார்? என்னுடைய வாழ்வு சுகத்தில் திழைக்க வேண்டும்..
மனைவி எப்படி இருப்பாள்??
அவள் நல்லாளாக விளங்குவாளா?
எனக்கு பிறக்கும் புதல்வன் என்னை மதிப்பானா?
என் உத்தரவை ஏற்ப்பானா?
மனித மனம் தனது வேண்டுதல் அனைத்தும் நிறைவேற்றுபவரிடத்தில் பரிபூரண மோகம் கொள்கிறது.
அங்கம் கொள்ளும் ஆசை பங்கம் விளைவிக்கிறது.
காரணம் என்ன?? ஏனெனில் ஆசை என்பது மனித மூளையை வியாபிக்கிறது. ஒருவரது ஆசையை உற்றவரே அறியாவிடில் மற்றவர் எவ்வாறு அறிவார்??
நிறைவேறும் என்று கனவு கண்ட ஆசை நிறைவேறாமல் போனால்.... ஆசை கொண்ட மனம் நிராசை அடைகிறது..
நிராசை அடைந்த அம்மனத்தில் போராட்டம் பிறக்கிறது.
அழிவிற்க்கான ஆரம்பம், அந்த போராட்டத்திலிருந்து துவங்குகிறது. ஆனால் மனிதர் தம் மனதில் பேராசை எனும் விதையை விதைக்காமல் அன்பினை விதைத்தால்....
அகண்ட அகிலமே நன்மையைப்பெறும்.
நன்மையைப்பெறும் அகிலத்தில் நலமோடு மானிடர்கள் வாழ்வார்கள் அல்லவா???
விதைப்பது எதுவென்று ஆலோசியுங்கள்.....
Leave a Comment