திரெளபதிக்கு மட்டும், ஐந்து கணவன்மார் வாய்த்த மர்மம் என்ன?


திரெளபதிக்கு மட்டும், ஐந்து கணவன்மார் வாய்த்த மர்மம் என்ன?




மகா­பா­ர­தத்தில் அனை­வ­ரது சர்ச்­சையைக் கிளப்­பி­விட்ட விசயம் இது. அண்ணன் தம்­பிமார் ஐவர்க்கு ஒரு மனை­வியா? அப்­ப­டி­யானால், எவ்­வாறு சண்­டை­யில்­லாது வாழ்க்­கையைக் பகிர்ந்தார்கள்? எல்­லோ­ருமே எப்­படி ஏகமன­தாக ஏற்றுக் கொடண்­டார்கள்?

தமிழர் பண்­பாடு ஒரு­வ­னுக்­கொ­ருத்தி என்­ப­துதான். ஆனால் திரெ­ள­பதை ஐவ­ருக்­கொ­ருத்­தி­யான மர்மம் இன்றும் பல­ருக்கும் புரி­யாத புதி­ரா­கவே உள்­ளது.

உண்­மையில் நடந்­த­துதான் என்ன? பாஞ்­சால தேசத்தின் மன்னன் துரு­பதன். தனது மகள் திரெ­ள­ப­திக்கு திரு­மணம் நடத்தி வைப்­ப­தற்­காக சுயம் வரத்தில் ஒரு போட்­டி­யையும் வைத்தார்.

பாண்­ட­வர்கள் ஐவரும் பாஞ்­சால தேசத்தில் நடை­பெற இருந்த சுயம்­வ­ரத்­திற்குச் சென்­றனர். அப்­போது தான் வியா­சக முனிவர் ஒரு வர­லாற்று உண்­மையை விப­ரித்தார். முனிவர் ஒரு­வ­ருக்கு அழ­கிய பெண் இருந்தாள், அவ­ளுக்கோ திரு­மணம் நடை­பெறக் கால­தா­மதம் ஆகிக் கொண்டே இருந்­தது. அப்­பெண்ணோ “தனக்கு திரு­மணம் விரைவில் நடை­பெ­ற­ வேண்டும்” என்று பர­ம­சி­வனைக் குறித்து கடுந்தவம் செய்தாள்.

பர­ம­சி­வனும் அவள் முன்பு தோன்­றினார். “பெண்ணே!, நீ விரும்­பிய வரத்தைக் கோள்” என்­றாராம். அந்தப் பெண்ணும் மிகுந்த பய­பக்­தி­யுடன் எம் பெரு­மானே!, நற்­கு­ணங்­களைக் கொண்­ட­வரை நான் கண­வ­னாகப் பெற வரமருளுங்கள்” என்று பணிந்தாள்.

பர­ம­சிவன் பதி­லேதும் கூறாமல் நின்றார். அப் பெண்­ம­ணியோ, தான் வேண்­டிய வரத்தை திரும்பத் திரும்பக் கூற­லானாள். இவ்­வாறு அவள் ஐந்து தட­வைகள் “நற்­கு­ணங்­களைக் கொண்­ட­வரை நான் கண­வ­னாகப் பெற வரமருளுங்கள்” என்று வேண்­டினாள்.

ஐந்தாம் முறை­யாக அப்பெண் கூறிய பின்பு பர­ம­சிவன் குறுநகை புரிந்தார். “பெண்ணே!, நீ விரும்­பிய வண்­ணமே நற்­கு­ணங்கள் நிறைந்த ஐந்து கண­வர்­களைப் பெறு­வா­யாக” என்று வர­ம­ரு­ளினார்.

“நான் ஒரு­வ­ரைத்தான் மணக்க விரும்­பு­கிறேன் ஆனால் நீங்கள் ஐவரை மணக்க வேண்­டு­மென அருளிச் செய்­தீர்­களே” என்று அப்­பெண்­மணி மெய் சிலிர்க்கக் கேட்டாள்.

“பெண்ணே…நீ ஐந்து முறை வரம் கேட்டாய் நானும் அரு­ளி­விட்டேன், அடுத்த பிற­வியில் நீ இந்த வரத்தின் படி கண­வர்­களைப் பெறுவாய்” என்று கூறி, பர­ம­சிவன் மறைந்தார். பர­ம­சி­வனால் வரம்­பெற்ற அப்பெண்தான் துரு­பதன் புத்­தி­ரி­யான திரெ­ள­ப­தை­யாவாள் என்று கூறி­மு­டித்தார் வியா­சக முனிவர்.

திரெ­ள­ப­தியை சுயம்­வ­ரத்தில் மணக்க துரு­பதன் ஒரு போட்டி வைத்­தி­ருந்தான். சுழலும் சக்­க­ரத்தின் நடுவில் உய­ரத்தில் ஒரு மீன் இருக்கும். கீழே உள்ள நிழலை நோக்­கி­ய­ப­டியே மேலே சுற்றும் மீனைக் குறி­பார்த்து அம்­பினால் எய்து வீழ்த்த வேண்டும் அதுதான் நிபந்­தனை.

இப்­போட்­டியைக் கண்­டு­ க­ளிக்­கவும் அதில் பங்­கு­பற்றி திரெ­ள­ப­தியை மனை­வி­யாக அடைய ஆவல் கொண்ட மன்­னர்­களும் கூடி­யி­ருந்­தனர். அக் கூட்­டத்தில் துரி­யோ­தனன், கர்ணன் இவர்­க­ளுடன் அந்­தணர் வேடத்தில் இருந்த பாண்­ட­வர்­களும் இருந்­தார்கள்.

போட்டி விறு­வி­றுப்­பாக ஆரம்­ப­மா­னது. பல நாட்டு மன்­னர்கள் வில்லில் நானேற்ற முடி­யா­த­வர்­க­ளாகத் தோற்றுப் போயினர். துரி­யோ­தனன் போன்­றோரும் வில்லின் வேகத்தால் கீழே விழுந்­தனர். கர்ணன் தன்­னு­டைய திற­மையால் நானேற்றி மேலே சுழல்­கின்ற மீனை வீழ்த்தி விடலாம் என்று உற்­சா­கத்­துடன் எழுந்தான்.

சபை­யிலே ஒரே உற்­சாகம் “நிச்­சயம் கர்ணன் வெற்­றி­பெற்று திரெ­ள­ப­தியை மணந்­து­கொள்வான்” என்று பேசிக் கொண்­டதும் திரெ­ள­ப­தியின் செவிப்­ப­றை­யிலும் முட்­டி­மோ­தி­யது. கர்ணன் வில்லைத் தொட்டு வளைக்கும் நேரத்தில் திரெ­ள­பதி தன் தோழி­யிடம் உரக்கக் கூறினாள்.

“ஒரு தேரோட்­டியின் மகன் இந்தப் போட்­டியில் வென்றால் நான் அவனை மணந்து கொள்ள மாட்டேன்” என்றாள். வில்லை வளைக்க முயன்ற கர்­ணனின் காது­களில் அவை இடி ஓசை­யாக ஒலித்­தது.

அக்­கினி மின்னல் அவன் உணர்­வு­களை ஊடு­ரு­விற்று. அவ­மா­னமும், வெறுப்பும் கர்­ணனைப் புடை­சூழ, வில்லை கீழே வைத்­து­விட்டு தனது இருக்­கையை நோக்கி நகர்ந்தான்.

அந்­தணர் வேடத்தில் இருந்த அர்ச்­சுனன் சுயம்­வ­ரத்தில் வென்று திரெ­ள­ப­தியை மணக்கும் தகுதி பெற்றான். துரு­பத மன்­னனின் ஆசி­யுடன் பெரி­யோர்­களின் வாழ்த்­துக்­க­ளு­டனும் அர்ச்­சுனன் திரெ­ள­ப­தி­யையும் அழைத்துக் கொண்டு தருமர், பீமன், நகுல, சகா­தே­வ­னு­டனும் இல்லம் வந்­த­டைந்­தனர்.

வாயிலில் நின்ற வண்ணம்  தாயே!, நாங்கள் மாங்­கனி ஒன்றை கொண்டு வந்­தி­ருக்­கின்றோம்  என்று பாண்­ட­வர்கள் கூற குந்­தி­தே­வியும் இல்­லத்­துள்ளே இருந்­த­வாறே  அவ்­வா­றாயின் ஐவரும் அதைப் பகிர்ந்து கொள்­ளுங்கள்  என்று மொழிந்தாள்.

“அர்ச்­சுனா போட்­டியில் வெற்றி பெற்ற நீயே திரெ­ள­ப­தியை மணக்க வேண்டும் தாய் கூறி­யதை நீ தவ­றாக எடை­போட வேண்டாம்” என்­று­ரைத்­தார்கள் சுகோ­த­ரர்கள். “வியா­சக முனிவர் நமக்கு உரைத்­தப்­படி தாயின் வாக்கு பொய்ப்­ப­தற்­கில்லை எனவே ஐவ­ருமே மணந்து கொள்வோம்” என்றான் அர்ச்­சுனன்.

பின்பு திரெ­ள­ப­தியின் முடிவை அறிய விழைந்த­ போது, தாய் குந்திமாதே­வியின் வாக்கை தெய்வ வாக்­காகச் சிர­மேற்று ஐவ­ரையும் மணக்க இசைந்தாள் திரெ­ள­பதி. பாண்­ட­வர்­களின் மனப் போராட்­டத்தைப் போக்க வியா­சகர் அங்கு வந்தார். பாண்­ட­வர்கள் தேவ­கு­மா­ரர்கள் என்றும் திரெ­ள­பதி லட்­சு­மியின் அம்சம் பெற்­றவள் என்றும் கூறினார். மேலும் பர­ம­சி­வ­னிடம் பெற்ற வரமே இது என விளக்­க­ம­ளித்தார்.

பாண்­ட­வர்கள் ஐவரும் திரெ­ள­ப­தியை மணந்து கொண்­டதும் தங்­க­ளுக்குள் ஒரு விதி­மு­றையை வகுத்துக் கொண்­டார்கள். ஒரு வருடம் ஒரு­வ­ரோடு திரெ­ள­பதி மனை­வி­யாக வாழ­வேண்டும். அவ்­வாறு அவர்கள் வாழும் ஓராண்டு காலமும் மற்ற நான்கு பாண்­ட­வர்­களும் அவர்­களைப் பார்க்கக் கூடாது. இவ் விதியை மீறிப்­பார்த்தால் அவர்­களைப் பார்த்­தவர் ஓராண்டு கான­கத்தில் வசிக்க வேண்டும்.

No comments

Powered by Blogger.