ஈடு இணை அற்ற வீரன் கர்ணன் !!
ஈடு இணை அற்ற வீரன் கர்ணன் !!
மகாபாரதத்தில் ஈடு இணை அற்ற வீரனாய் நாம் அறிந்த கர்ணனை பற்றிய பதிவு இது...!!
ஒன்றா, இரண்டா அவன் சிறப்பு. ஈகைக்கும், நட்புக்கும் அவன் தந்த மதிப்பு...!!
செய்நன்றி மறவாத அவனது பண்பு, தன்னிலே தான் கொண்ட நம்பிக்கை, பிற உயிரையும் தன் உயிராய் நினைக்கும் பாங்கு....!!
வாக்கு மாறாமை, அத்துணைக்கும் மேலே, இணையற்ற வீரம், என்னிலைக்கு போயினும் தன்னிலை மறவாத நேர்மை என இன்னும் உண்டு ஆயிரம்.....!!
வீரம், ஈரம், கம்பீரம், கொடை, ஆண்மை எனும் சொற்களுக்கு உருவேற்றி இருந்த உருவம் கர்ணன்.....!!
பிறந்தது முதலே விதியால் வஞ்சிக்கப்பட்டு, பல அவமானங்களுக்கு இடையே வளர்ந்தாலும் தன் திறமையை பிறர் புகழ வளர்த்துக் கொண்டவன்......!!
வாழ்க்கையில் கர்ணனை ஒரு முன் உதாரணமாய் கொண்டு வாழ இன்னும் இருக்கின்றன நிறைய விஷயங்கள்.............!!!
Leave a Comment