பீஷ்மர், யுதிஷ்ட்ரருக்குச் சொன்ன அறிவுரை
பீஷ்மர், யுதிஷ்ட்ரருக்குச் சொன்ன அறிவுரை
யுதிஷ்ட்ரன் - ‘இம்மையிலும்.. மறுமையிலும் அரசனுக்கு நன்மை தரக் கூடிய குணங்கள் யாவை?’
பீஷ்மர் - ‘ஒரு மன்னன் 36 குணங்களைக் கடை பிடிக்க வேண்டும்.
அவை பி்ன்வருமாறு....
- விருப்பு, வெறுப்பு இன்றித் தர்மங்களைச் செய்தல்
- பரலோகத்தில் விருப்புடன் நட்புப் பாராட்டுதல்
- அறவழியில் பொருளை ஈட்டுதல்
- அறம் பொருள்கட்கு அழிவின்றி இன்பத்தைப் பெறுதல்
- யாருடனும் அன்புடன் பேசுதல்
- நல்லவர் அல்லாதார்க்குத் தராத கொடையாளியாக இருத்தல்
- தற்புகழ்ச்சியின்றி இருத்தல்
- கருணையுடன் இருத்தல்
- கெட்டவர்களுடன் சேராது நல்லவர்களுடன் சேர்ந்திருத்தல்
- பகைவன் எனத் தீர்மானித்துப் போரிடல்
- நற்குணம் அற்றவரிடம் தூதர்களைச் சேராதிருத்தல்
- பிறர்க்குத் துன்பம் தராது பணிபுரிதல்
- சான்றோரிடம் பயனை அறிவித்தல்
- பிறரது குணங்களை மட்டுமே கூறுதல்
- துறவியர் அல்லாதாரிடம் கப்பம் வாங்குதல்
- தக்காரைச் சார்ந்திருத்தல்
- நன்கு ஆராயாமல் தண்டனை தராதிருத்தல்
- ரகசியத்தை வெளியிடாதிருத்தல்
- உலோபிகள் அல்லாதார்க்குக் கொடுத்தல்
- தீங்கு செய்பவரை நம்பாதிருத்தல்
- அருவருப்படையாமல் மனைவியைக் காத்தல்
- தூய்மையுடன் இருத்தல்
- பல பெண்களுடன் சேராதிருத்தல்
- நலம் பயக்கும் சுவைகளை உண்ணுதல்
- வழிபடத் தக்கவர்களைக் கர்வம் இன்றி வழிபடல்
- வஞ்சனையின்றிப் பெரியோர்க்குப் பணிவிடை செய்தல்
- ஆடம்பரமின்றித் தெய்வ பூஜை செய்தல்
- பழிக்கு இடமில்லாப் பொருளை விரும்புதல்
- பணிவுடன் பணிபுரிதல்
- காலம் அறிந்து செயல்படுவதில் வல்லவனாய் இருத்தல்
- பயனுள்ளவற்றையே பேசுதல்
- தடை சொல்லாது உதவி புரிதல்
- குற்றத்திற்கேற்பத் தண்டித்தல்
- பகைவரைக் கொன்றபின் வருந்தாதிருத்தல்
- காரணமின்றிச் சினம் கொள்ளாதிருத்தல்
- தீங்கு செய்தவரிடம் மென்மையாக இராமை
Leave a Comment