கீதை காட்டும் பாதை
கீதை காட்டும் பாதை
நம்மை சுற்றி என்ன நடந்தால் என்ன பகவான் பார்த்துக்கொள்வார் என்ற எண்ணம் உள்ளவரா நீங்கள். பகவான் எல்லாவற்றையும் பார்த்து கொண்டுதான் உள்ளார். நாம் எதுவுமே செய்யாமல் சும்மா இருப்பது உள்பட.
கீதையில் கண்ணன் தர்மத்தை செய் என்பதை விட அதர்மத்தை எதிர்த்து போராடு என்பதையே பெரிதும் வலியுறுத்துகிறான்.
கீதையை ஏன் இறைவன் யுத்தத்திற்கு இடையே போதித்திருக்க வேண்டும் ? அமைதியான சூழ்நிலையில் போதித்திருக்கலாமே ? ஒரு ஆசிரமத்திலோ, ஒரு சாத்வீகமான சூழ்நிலையிலோ கீதையை உபதேசித்திருக்கலாமே ? ஒரு பெரும் போர்களத்தின் நடுவிலா அதை உபதேசிக்க வேண்டும் ?
மஹாபாரத யுத்தம் என்பது போர்களம். தர்மத்திற்கு, அதர்மத்திற்கும் நடக்கும் போர். நம் மனதிற்குள்ளும், நம் வாழ்க்கையிலும், நம் தேசத்திலும் அப்படிப்பட்ட போர்தான் நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது. அதர்மத்திற்கும், தர்மத்திற்கும் இடையே முடிவில்லாத ஒரு போர் நடந்துக் கொண்டே இருக்கிறது. போர்களம் இடைவிடாத செயலாற்றலை குறிக்கிறது.
பல நேரங்களின் அர்ஜுனனின் நிலைதான் நமக்கும். எதற்கு போரிட வேண்டும் ? அதர்மிகள் நமக்கு வேண்டப்பட்டவர்களாக தெரிகிறார்கள். நமக்கு நெருங்கியவர்களாக இருக்கிறார்கள். ஏன் நம் எண்ணங்களாகவே கூட அவை இருக்கின்றன. இத்தனை நெருக்கமானவர்களை எதற்கு எதிர்க்கவேண்டும் என்கிற எண்ணம் தலை தூக்குகிறது.
நாம் ஏன் எதிர்க்க வேண்டும், வேறு பலர் அதற்காக பிறந்திருக்கிறார்களே என்ற எண்ணமும் வருகிறது.
அதர்மத்திற்கு எதிரான போரை நாம் விருப்பு வெருப்பற்ற நிலையில் செய்ய வேண்டும் என்கிறான் கண்ணன்.
Leave a Comment