கீதை கங்கையைக் காட்டிலும் சிறந்தது.
"நாராயணம் நம்ஸ்க்ருத்ய நரம் சைவ நரோத்தமம் !
தேவீம் ஸரஸ்வதீம் வ்யாஸம் ததோ ஜயமுதீரயேத் !!"
கீதை கங்கையைக் காட்டிலும் சிறந்தது.
கங்கையில் நீராடுபவன் வேண்டுமானால் முக்தி அடையலாம். அவன் பிறரை கரையேற்ற முடியாது. ஆனால் கீதை வடிவான கங்கையில் மூழ்கி எழுபவன் தான் மட்டும் முக்தி பெறுவதில்லை. பிறரையும் கரையேற்றும் தகுதி படைத்தவன் ஆகிறான்.
கங்கை பகவானுடைய திருவடித் தாமரையிலிருந்து பெருகியது. ஆனால் கீதை ஸாக்ஷாத் பகவானுடைய திருமுகத் தாமரையிலிருந்து வெளிவந்தது.
கங்கைக்கு சென்று அதில் நீராடுபவனுக்கு மட்டுமே கங்கை முக்தி அளிக்கிறது. கீதையோ ஒவ்வொரு வீடாகச் சென்று அங்குள்ளவருக்கு முக்தி மார்க்கத்தை போதிக்கிறது. ஆகவே கீதை கங்கையைக் காட்டிலும் சிறந்தது.
கீதை பகவானை விடப் பெருமை வாய்ந்தது என்று சொல்வோமேயானால் அதுவும் மிகையாகாது. அவரே சொல்கிறார்---
"கீதாஸ்ரயேயகம் திஷ்டாமி கீதா மே சோத்தமம் க்ருஹம்!
கீதாஜ்ஞாநமுபாஸ்ரித்ய த்ரீந்லோகாந் பாலயாம்யஹம் !!"
(வராஹபுராணம்)
(கீதையை அண்டி நான் வாழ்கிறேன். கீதை தான் என்னுடைய சிறந்த வீடு. கீதையின் ஞானத்தைக் கைக்கொண்டு நான் மூவுலகங்களையும் காக்கிறேன்.)
இதைத் தவிர கீதையிலேயே பகவான் மனம் விட்டுக் கூறுகிறார்---- 'இந்த கீதை என்ற ஆணையை நிறைவேற்றுபவர் ஐயமின்றி முக்தி பெறுவர்'. இது மட்டுமன்று. 'இதை ஒருவர் கருத்தூன்றிப் படித்தாலே போதும். அவர் செய்யும் ஞான யஞ்யத்தால் நான் வழிபடப்பட்டவனாக ஆவேன் என்கிறார்.
Leave a Comment