பரமாத்மாவே யாவும் என்பதின் கூற்று.......


பரமாத்மாவே யாவும் என்பதின் கூற்று.......


கிருஷ்ணரின் மகிமையும்,
கீதையின் பெருமையும், ஒன்றாக சங்கமிக்கும் புண்ணிய காவியம்,
மகாபாரதம்! மகாபாரதம்!
பரமாத்மாவே யாவும் என்பதின் கூற்று.......
நானே இந்த அகிலம், அகிலத்தின் அனைத்து அணுவும் நானாவேன், சூரியனும் நானாவேன், குளிர் சந்திரனும் நானாவேன், நட்சத்திரங்களும் அனைத்து கிரகங்களும் நானே, ஒளி பொருந்திய சூரியனை விட புராதனன், விருட்சத்தில் துளிர்க்கின்ற தளிரை விட புதுமையானவன், அனைத்து மானிடரும் நானாவேன், மேலும், சொர்க்கம் மற்றும் நரகத்தை ஆட்டுவிக்கும் சக்தி ஆவேன், கொடிய எண்ணம் கொண்ட துரியனும் நான், வில்லேந்திய விஜயனும் நானே..,
"நானே அனைத்தும் ஆன பரமாத்மா"
மச்ச அவதாரமும் நானே.,
வாமன அவதாரமும் நானே.,
பரசுராமரும் நானாவேன்.,
தசரத நந்தன் ராமரும் நானாவேன்.,
நானே பிரம்மா, விஸ்ணு, சர்வேஸ்வரன்.,
அத்துடன், சரஸ்வதி, காளி, மகாலட்சுமியும் ஆவேன்,
நான் ஆண் மகனும் அல்ல, ஸ்த்ரியும் அல்ல, இரண்டும் அல்லாதவனும் அல்ல.,
சரீரம் உற்றவன் நான், சரீரம் அற்றவன் நான்,
ஞாணம் நான், சிருஸ்ட்டியும் நான்,
ஆன்ம ஒளியும் நான், பரப்ரம்மமும் நான்..,
"காணும் அனைத்தும் நான்"
எதுவும் அற்ற சூட்சமமும் நான், பிறப்பற்றவன் நான், இறப்பற்றவன் நான்.,
ஜகத்தில் வாழும் ஜீவன்கள் அனைத்தும் தலை வணங்கும் சிறப்புற்றவன் நான்.,
....""நானே பரமாத்மா ஆவேன்""..
நான் இந்த பிரபஞ்சத்தின் அணுவிலும் வாசம் செய்பவனாவேன்.,
பிரகாச ஒளி பொருந்திய ரவியும், அம்புலியும், நட்சத்திரங்களும் இந்த பரந்தாமனது ஒளியின் துளி ஆகும்.,
நானே சத்தியம், நானே பரிபூரனம்.,
முதலும் நானாவேன்,
முடிவும் நானாவேன்,
அட்சரங்களில் ஆகாரம்,
வேதங்களில் சாம வேதம்,
தேவனில் இந்திரன் நான்,
புரோகிதரில் பிரகஸ்பதி நான்.,
யட்சரில் குபேரன், ருத்ரனில் சங்கரன், வசுக்களில் அக்னி நான், பர்வதங்களில் மேரு, அதோடு, மகரிஷிகளில் ப்ருகு.,
துவனியில் ஓங்காரம் நான், யக்யத்தில் ஜபமும் நான்.,
விருட்சங்களில் பவித்ர அரச மரம்..,
அடையும் "அனுபவம்" நான்,
"அறிவும் நான்"., சாந்தம் அதோடு "பொறுமையும்" நான்.,
உக்ரமும் நான்.,
கீர்த்தி அனைத்தும் நான்., கந்தர்வர்களில் சித்ரரதன் நான்., தேவ ரிஷியில் நாரதர் நான்., மாமுனிவரில் கபிலர் நான்., அசுவங்களில் உச்சைர்சவம்.,
வேடங்களில் ஐராவதம்.,
விலங்குகளில் வீரகேசரி., பட்ச்சிகளில் கருடன்., மாந்தரருள் வேந்தன்., ஆயுதங்களில் வஜ்ரம் நான்., பசுக்களில் காமதேனு நான்., சர்பங்களில் வாசுகி நான், ஐந்து தலை சேஷனும், எமதர்மனும் நான், பொழியும் வர்ணன் நான், தடை தகர்க்கும் வாயும் நான்.,
இறைவன் ராமர் நான், பவித்ர கங்கை நான்.,
பரந்த சிருஷ்ட்டியின் "துவக்கம், தொடர்ச்சி, அடக்கமும் " நான்..
ப்ரம்ம வித்தை, மகா காலன், ப்ரம்ம தேவனும் நான், தவம், தானம், பெரும் புகழ், ஸ்திரம் நான், நியாயம், நீதி, தண்டனை, மரணம், அத்துடன், "தத்துவ ஞாணமும் நானே,"

வாசுதேவன் நான், அர்சுனன் நான், வேதவியாசன் நான்..,
"நானற்றதென அகிலத்தில் எதுவும் இல்லை.."..
எண்ணுல் உரையும் பேராற்றலில் ஒரு சிறு ஆற்றலே தரணியை தாங்கி உள்ளது எணும் தத்துவத்தினை உணர்வாயாக.........................
...""நாராயாணம் நமஸ்க்ரிட்யா நரம் ஜெய்வா நறுத்தமம்.. தேவின் சரஸ்வதிம்யாசம் ததோ ஜாயம் உதிரயேத்......................... ""

No comments

Powered by Blogger.